6.04.2011

உரிமை ! இருக்கிறதா ? இல்லையா ?

சிந்தித்து சிந்தித்து வாழ்க்கை வாழத்தான் என்ற முடிவுக்குத்தான் அனைவரும் வந்திருப்போம்.

அந்த வாழ்க்கைக்குரிய உரிமையை நாம் பெற்றிருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள ஆவலுடன் அமைதிப் பூங்காவை எதிர்நோக்கி 01-06-2011 இன்றுவரைக் காத்திருக்கும் கண்களுக்கு கனிவுடன் முதலில் காணப்போவது..

பிறப்பில் உரிமை  இருக்கிறதா ? என்பதுதான்..
இல்லவே இல்லை.. அப்படி பிறப்பில் ஒவ்வொருவருக்குமே உரிமை இருந்திருக்குமேயானால்..

1. எந்த மனிதனும் ஏழையாக பிறந்திருக்க மாட்டான்.

2. எந்த மனிதனும் கருப்பாக பிறந்திருக்க மாட்டான்.

3. எந்த மனிதனும் ஊனமுற்றவனாக பிறந்திருக்க மாட்டான்.

4. எந்த மனிதனும் மூளைவளர்ச்சி குறைந்தவனாகப் பிறந்திருக்க மாட்டான்.

5. எந்த மனிதனும் குள்ளமாக பிறந்திருக்க மாட்டான்.

6. எந்த மனிதனும் அறிவு குறைந்தவனாக பிறந்திருக்க மாட்டான்.

7. எந்த மனிதனும் குறவர்க்கு பிறந்திருக்க மாட்டான்.

8. எந்த மனிதனும் பொருளாதார வளர்ச்சி குறைந்த நாட்டில் பிறந்திருக்க மாட்டான்.

9. எந்த மனிதனும் அழகு குறைந்தவனாக பிறந்திருக்க மாட்டான்.
இப்படியாக இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிறப்பில்தான் உரிமை இல்லை.இறப்பிலேயாவது உரிமை இருக்கிறதா..? என்று பார்த்தால் அதுவும் இல்லை.
அப்படி இறப்பில் உரிமை இருக்குமேயேனால்..

1, எந்த மனிதனும் விபத்தில் இறந்திருக்க மாட்டான்.

2. பிற மனிதரால் கொலை செய்யப்பட்டு மரணிக்க மாட்டான்.

3. கழிவறையில் மரணிக்க மாட்டான்.

4. கொடூரமான நோயால் ஹார்ட் அட்டாக், எய்ட்ஸ்,புற்றுநோய் இவற்றால் இறந்திருக்க மாட்டான்.

5. தற்கொலையால் மரணிக்க மாட்டான்.

6. எதிரிகளால் விஷம் வைத்து மரணிக்கப்பட மாட்டான்.

7. சுனாமி, நிலநடுக்கம்,இடி மின்னல் தாக்குதல் போன்றவற்றால் மரணிக்க மாட்டான்.

இதையும் இப்படியே இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
சரி பிறப்பிலும் இல்லை இறப்பிலும் இல்லைஇந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்நாளிலாவது உரிமை இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

1.கட்டிடத் தொழிலாளி நாம் டாக்டராக ஆகி இருக்க வேண்டாமா என்று நினைக்கிறார்.

2. குடிசையில் வாழ்பவன் மாளிகையில் வாழ நினைக்கிறான்.

3. பிளாட்பாரத்தில் வாழ்பவர் ஒரு குடிசை கிடைக்காதா என்று நினைக்கிறான்.

4.திருமணம் நடந்தால் அவரவர் நினைத்தபடி நிறைவாக நடப்பதாக தெரிய வில்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி.

5.பெண்கள் தன் ஆசைக்கிணங்க நகைகளைப் போட்டு தைரியமாக போக முடியவில்லை.

6. வங்கிகளில் நிறைய பணங்களை எடுத்து வருபவர் பயந்து பயந்துதான் வர வேண்டியுள்ளது.

7.யாரும் விரும்பியும் விரும்பாமலும் ஏதாவது நோய் தொற்றிவிடுகிறது.நிம்மதி இல்லை.

8.வீடுகளைப் பூட்டிவிட்டு தைரியமாக சொந்தங்கள் வீட்டுக்கோ அல்லது உல்லாச பயணமோ போக முடியவில்லை திருட்டு போய்விடுகிறது.

9.பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்றால் பணம் தேவை. அது இல்லை என்றால் படிக்க முடியாது.

10.வேலை வாய்ப்பு நாம் நினைப்பது போல் அமைவதில்லை.

இப்படியாக இதையும் நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்,

இப்படி பிறப்பிலும் இறப்பிலும் வாழ்நாளிலும் உரிமையே இல்லாத மனிதனின் வகைகள் எத்தனை என்பதை பார்ப்போம்.

ஒரு சிலர் சொல்வார்கள்: ஆண் பெண் என்று சுருக்கமாக முடித்து விடுவார்கள்.
இன்னும் சிலர் ஆண்,பெண்,அரவாணிகள் என்று முடித்துக் கொள்வார்கள்.

இனி ஒரு சாரார் கருப்பு வெள்ளை மாநிறம் என்று சொல்வார். மற்றொரு சாரார் படித்தவன்,படிக்காதவன்,ஏழை,பணக்காரன்உயரமானவன்,குட்டையானவன்,
வலிமை வாய்ந்தவன்,பலஹீனமானவர்,ஒல்லியானவர்,குண்டானவர்
இப்படி அடுக்குவார்கள்.

இன்னொரு சாரார். இந்தியன்,அமெரிக்கர்,அராபியர்,ஜெர்மானியர்,ஜப்பானியர்,சீனர் ,கொரியர்,
ஆப்பிரிக்கர் என்று சொல்வர்.இவை எல்லாம் போக இன்னொரு வகை இருக்கிறது.

        A                               B
நல்லவன்-------------------------------கெட்டவன்

உதவி செய்பவர்----------------------கஞ்சன்

பொறுமையாளன்--------------------அவசரக்காரன்

நம்பிக்கையாளன்---------------------நயவஞ்சகன்-

கொடைவள்ளல்-----------------------கருமி

இரக்கமுடையவன்--------------------கொடூரமானவன்

நல்லதையே பேசுபவர்----------------தீயதையே பேசுபவர்

அமைதியானவர்-------------------------கோபமுடையவர்

உண்மையாளர்----------------------------பொய்யர்

பொதுநலவாதி-----------------------------சுயநலவாதி

பண்புடையவர்------------------------------பாவி

நீதியாளர்--------------------------------------அக்கிரமக்காரன்

சமாதான விரும்பி--------------------------குழப்பவாதி

தாராள குணவாளர்------------------------ -கடுகடுப்பாளார்

மனசாட்சிக்குப் பயப்படுபவர்-------------முரட்டுத்தனமானவர்

ஏற்றுக் கொள்பவர்----------------------------மறுப்பவர்

குற்றம் மறைப்பவர்-------------------------கோள் மூட்டுபவர்

அமானிதர்------------------------------------- -போட்டுக் கொடுப்பவர்

அறம் செய்பவர்------------------------------- புறம்பேசுபவர்

தட்டிக் கேட்பவர்------------------------------பொல்லாதவர்

கொடுத்து உதவுபவர்------------------------ போக்கிரி ரவுடி

பிறர்நலம் நாடுபவர்-------------------------- நன்றி கெட்டவர்.

இதில் எந்தவகையை சார்ந்தவராக இருக்க விரும்புகிறீர்கள்? ஆசைப்படுகிறீர்கள்..?
எந்த வகை பிரிவாக இருந்தாலு சரி வாழ்க்கையில்
ஏமாறலாமா..? அல்லது ஏமாற்றலாமா?
என்பதை அடுத்து வரும் 01-07-2011-ல் அறிந்து கொள்ளப் போகிறோம்

மேலும் 'அமைதிப்பூங்கா' பிளாக்ஸ்பாட்டை தொடர்ந்து ஆவலுடன் பார்த்தும் இனி பார்க்கவும் இருக்கும் சகோதர சகோதரிகள் அனைவரும் மறக்கவே கூடாத ஒரு அறிவுப்பும் வேண்டுகோளும் கூட..

எல்லோரும் நலம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நோக்கத்தில் அமைதிப்பூங்கா என்ற தலையங்கத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் பிரசுரம் செய்து வருகிறோம் இப்பிரசுரம், செய்தி, தகவல் வன்முறையை தூண்டக்கூடியதாக உள்ளது என்று ஒருசிலர் புகார் செய்திருப்பதாகவும் அதனால் தற்காலிகமாக தமிழ்மணத்தில் தடை செய்திருக்கிறார்கள்.

எனவே புகார் செய்த சகோதர சகோதரிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மட்டும்
"சந்தேக கோடு அது சந்தோஷ கேடு.. "
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானுங்களே..

ஆகவே உங்களுக்கான பதிலும் தெளிவும் பெறுவதற்கு

1.  தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று ஒருபிரபல நபர் சொல்லியுள்ளார்.இதை நீங்கள் வன்முறையாகத்தான் எடுத்துக் கொள்வீர்களா?

2.உங்களுக்குத் தெரிந்த எதாவது ஒரு தமிழ் பண்டிதரிடம் படித்துப் பார்க்கச்சொல்லி அவருடைய வாக்கு மூலம் கேட்டு தெளிவு பெறுங்கள்.

3.ஒரு வார்த்தை கூட வன்முறையைத் தூண்டக்கூடியதாக காண்பிக்க முடியாது.

4.ஒவ்வொரு வார்த்தையும் நன்முறையையும் நன்மையையும் சிந்தனையையும் சீர்திருத்தத்தையும் தூண்டும் சிறந்த சொற்களைத் தவிர வேறெதுவையும் காண முடியாது.

5. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?

நேரடியாக எங்களிடம் கருத்து பெட்டகத்தின் மூலமாக விளக்கி நீங்கள் நன்முறையை நாடுபவராக இருந்தால் எங்களை அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதன் பொருளுக்கு இணங்க திருத்தலாமே ஏன் இந்த தலைமறைவு?

6.எங்களுடைய பிரசுரம் புகார் செய்தவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பொறாமையை ஏற்படுத்தி உள்ளது என நினைக்கிறேன்

7.பொதுவாக எல்லோரும் பார்க்கும் தமிழ்மணத்தில் ஒருவருக்கு எப்படி விமர்சனம் செய்வது என்பது கூட தெரியவில்லை.தமிழ்பண்பு தெரியாதவர் போல் தோன்றுகிறது.

எங்களைப் போன்ற மூதேவிகளின் முயற்சியால்தான் நீங்கள் எல்லாம் சீதேவிகளாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பதற்கான பல வரலாறுகளைப் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

யார் தடை செய்ய முயற்சித்தாலும் உங்களுடைய ஒவ்வொரு தடையும் உங்கள் உடன்பிறவா சகோதரனுக்கு ஆயிரம் படிக்கற்களாய் அமையும் என்பதை அன்புடன் சகோதர உணர்வுடன் தொடர்ந்து அமைதிப் பூங்காவை தவறாதுப் பார்த்து தங்கள் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதுடன் தமிழகத்துக்கு ஒரு நல்ல சரியான நலத்திட்டம் உருவாக உதவியாகவும் இருங்கள் என்று நன்முறையாகக் கேட்டுக் கொள்கிறோம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய