7.17.2011

ஏமாறலாமா? ஏமாற்றலாமா?

பிறப்பிலும், இறப்பிலும், இவை  இரண்டிற்கும்  இடைப்பட்ட  வாழ்நாளிலும்   தனக்கென்று  எந்த  உரிமையையும்  பெற்றிராத  இந்த  மனித  சமூகம்  முழுவதும்நலமாய்நல்லவிதமாய்நாகரீகமாய்      வாழத்தான்  நினைக்கின்றதுமுனைகிறது.
ஆனால்,அந்த   ஆசை  நிறைவேறுவதில்லை  மகான்களாக  இருந்தாலும்  சரிமாமேதைகளாக  இருந்தாலும்  சரிதான்.
அந்த  காரணத்தைத்தான்  01.07.2011  இன்று  நாம்
அமைதி   பூங்காவில்     ஏமாறலாமா?   ஏமாற்றலாமா?
என்ற  தலைப்பின்  ஊடாகத்  தெரிந்துக்  கொள்ள  போகிறோம்  100  %  மக்களும்  ஏதாவது   ஒருவிதத்தில்  ஏமாந்து  விடுகிறார்கள்  இதில்  10 % மக்கள்  ஏமாற்றக்  கூடியவர்களாக  இருக்கிறார்கள்.
இதற்கானஅடிப்படைக்  காரணம்   ஒன்றே  ஒன்றுதான்   "நம்பிக்கைஒவ்வொருவரும்  ஒரு  நம்பிக்கையில்தான்   வாழ்வை  ஓட்டிக்   கொண்டிருக்கிறார்கள்.
இது  பலவகைப்படும் :       இறைநம்பிக்கை,  தன்னம்பிக்கை,   இப்படி   அடுக்கலாம்.
ஏமாறுவதற்க்கும்,   ஏமாற்றுவதற்கும்   முதலிடம்   வகுப்பது   "மூடநம்பிக்கை"யாகும்;   எனவே   மூடநம்பிக்கை   என்றால்   என்ன?   என்பதை   முதலில்  நாம்   விளங்கிக்கொள்ள   வேண்டும்.
அதை   நாம்   01.08.2011-ல்   விளங்கப்படுத்துவதுடன்   யார்யார்   எப்படியெல்லாம்   ஏமாறுவார்கள்அல்லது   ஏமாற்றுவார்கள்   என்பதை    கீழ்காணும்   தலைப்பில்   விரிவாக   விளங்க   இருக்கிறோம்.
1.அரசாங்கம்   எப்படி   மக்களை   ஏமாற்றுகிறது ;    மக்கள்   எப்படி   ஏமாறுகிறார்கள்;   மக்கள்   எப்படி   அரசாங்காத்தை   ஏமாற்றுகிறார்கள்.
2.ஆன்மீகவாதிகள்   பக்தர்களை  எப்படி   ஏமாற்றுகிறார்கள்;   பக்தர்கள்   எப்படி   ஏமாறுகிறார்கள்;   பக்தர்கள் எப்படி   ஆன்மீகவாதிகளை   ஏமாற்றுகிறார்கள்ஆன்மீகவாதிகள்   எப்படி   ஏமாறுவார்கள்.
3.தொண்டு   நிறுவனங்கள்   எப்படி   ஏமாற்றுகிறார்கள்;   அதை   நம்புபவர்கள்   எப்படி   ஏமாறுகிறார்கள்மக்கள்  தொண்டு   நிறுவனத்தை   எப்படி   ஏமாற்றுகிறார்கள்.
4. கணவன்   மனைவியை   எப்படி   ஏமாற்றுகிறான்மனைவி   எப்படி  ஏமாறுகிறாள்மனைவி  எப்படி  கணவனை   ஏமாற்றுகிறாள்கணவன்  எப்படி   ஏமாறுகிறான்;
5.மருத்துவர்   எப்படி   நோயாளிகளை   ஏமாற்றுகிறார்நோயாளி  எப்படி   ஏமாறுகிறார்;நோயாளி எப்படி  மருத்துவரை    ஏமாற்றுகிறார்மருத்துவர்   எப்படி    ஏமாறுகிறார்
6.முதலாழி   எப்படி   தொழிலாளியை    ஏமாற்றுகிறார்;   தொழிலாளி   எப்படி    ஏமாறுகிறார்தொழிலாளி எப்படி    முதலாழியை   ஏமாற்றுகிறார்;   முதலாளி    எப்படி   ஏமாறுகிறார்.
7.மணமகன்    அல்லது   மணமகளை    தேடும்   போது   மணமகன்   வீட்டார்    மணமகள்      வீட்டாரை   எப்படி   ஏமாற்றுகிறார்கள்; மணமகள்    வீட்டார்   எப்படி   ஏமாறுகிறார்கள்;   மணமகள்   வீட்டார்   எப்படி    மணமகனை ஏமாற்றுகிறார்கள்;   மணமகன்   வீட்டார்    எப்படி    ஏமாறுகிறார்கள் .
8.ஒரு   நாடு    மற்றொரு   நாட்டை  எப்படி   ஏமாற்றுகிறது;   
இப்படியாக   இன்னும்   பலவகையில்   ஏமாறுதலையும் , ஏமாற்றுதலையும்   விளங்கிக்கொள்ளப்    போகிறோம்.   
1.ஒருவரால்   மற்றொருவர்   ஏமாறுவது
2.தன்னைத்தானே    ஏமாறுவது   என  இருவகைப்படும்
இப்படி   எல்லாம்    எழுதுவதற்கு    காரணம்    என்ன?
மனிதனை,   மனிதன்    சாப்பிடுகிறான்.
இது   மாறுவது    எப்போதுதீருவது   எப்போது    என்பது   தான்    நமது   கவலையாய்    இருக்கிறது.
இதை   மாறுவது,   என்பது   இனி   உள்ளக்   காலங்களில்   ஆன்மீகவாதிகளாலோ,அரசியல்வாதிகளாலோ    முடியாத   காரியம்   என்பது   தெள்ள   தெளிவாக  தெரிந்து   விட்டது
எனவே  , தான்   மாணவ,   மாணவியரைக்   கொண்டு   நமது   தேவைகள்   அனைத்தையும்   சேவையாக   மாற்றி   செயல்ப்படுத்துவதற்கு   "அமைதி   பூங்கா" என்று    முனைந்துள்ளோம்
எனவே,   மாணவ    மாணவியர்க்குஅன்புடன்
* சமச்சீர்க்   கல்விக்காக  செய்தது   தேவையற்ற  கிளர்ச்சி
*ஆர்ப்பாட்டமும்போராட்டமும்   என்றும்    தராது   மலர்ச்சி
*செய்ய   வேண்டியது   அரசே   அரவணைக்கும்    நிகழ்ச்சி
*"அமைதி   பூங்கா"   அடைய   வேண்டும்    அதற்கு   வளர்ச்சி
*இதில்தான்    நமக்கு    இருக்கு    நிச்சயம்    எழுச்சி
*அதற்காக   எடுக்க     வேண்டும்     உண்மையான  முயற்ச்சி
*அதில்    ஏற்படும்   தடங்கல்களில்   வரக்கூடாது       மன   தளர்ச்சி
*இதில்   தான்     மனித    சமுதாயத்திற்கே    கிடைக்கும்    பெரும்  உயர்ச்சி
*அதற்காக   செய்வோம்    "அஹிம்சையுடன்"    அறிவு புரட்சி
*இதில்   நமக்கு   கிடைப்பது    உறுதியான,   உண்மையான    மன  மகிழ்ச்சி
*இதற்கு   நம்மிடம்   தேவை   முழு   ஒற்றுமை   எனும்  உணர்ச்சி
நாடென்ன   செய்தது   நமக்கு;
எனக்   கேள்விகள்   கேட்பது   இழுக்கு
நாமென்ன   செய்தோம்   அதற்கு
என   உணர்ந்தால்    நன்மை    நமக்கு
"அமைதி  பூங்கா"வை    படிப்பவர்கள்    தவறாது    இச்செய்திகளை     தங்களுக்கு    அறிந்த    மாணவ ,   மாணவியர்களுக்கு    அறிமுகம்   செய்யவும்.
"நல்லதையே   நினைப்போம்;   நல்லதையே   செய்வோம்:நல்லதே   நடக்கட்டும்."

6.04.2011

உரிமை ! இருக்கிறதா ? இல்லையா ?

சிந்தித்து சிந்தித்து வாழ்க்கை வாழத்தான் என்ற முடிவுக்குத்தான் அனைவரும் வந்திருப்போம்.

அந்த வாழ்க்கைக்குரிய உரிமையை நாம் பெற்றிருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள ஆவலுடன் அமைதிப் பூங்காவை எதிர்நோக்கி 01-06-2011 இன்றுவரைக் காத்திருக்கும் கண்களுக்கு கனிவுடன் முதலில் காணப்போவது..

பிறப்பில் உரிமை  இருக்கிறதா ? என்பதுதான்..
இல்லவே இல்லை.. அப்படி பிறப்பில் ஒவ்வொருவருக்குமே உரிமை இருந்திருக்குமேயானால்..

1. எந்த மனிதனும் ஏழையாக பிறந்திருக்க மாட்டான்.

2. எந்த மனிதனும் கருப்பாக பிறந்திருக்க மாட்டான்.

3. எந்த மனிதனும் ஊனமுற்றவனாக பிறந்திருக்க மாட்டான்.

4. எந்த மனிதனும் மூளைவளர்ச்சி குறைந்தவனாகப் பிறந்திருக்க மாட்டான்.

5. எந்த மனிதனும் குள்ளமாக பிறந்திருக்க மாட்டான்.

6. எந்த மனிதனும் அறிவு குறைந்தவனாக பிறந்திருக்க மாட்டான்.

7. எந்த மனிதனும் குறவர்க்கு பிறந்திருக்க மாட்டான்.

8. எந்த மனிதனும் பொருளாதார வளர்ச்சி குறைந்த நாட்டில் பிறந்திருக்க மாட்டான்.

9. எந்த மனிதனும் அழகு குறைந்தவனாக பிறந்திருக்க மாட்டான்.
இப்படியாக இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிறப்பில்தான் உரிமை இல்லை.இறப்பிலேயாவது உரிமை இருக்கிறதா..? என்று பார்த்தால் அதுவும் இல்லை.
அப்படி இறப்பில் உரிமை இருக்குமேயேனால்..

1, எந்த மனிதனும் விபத்தில் இறந்திருக்க மாட்டான்.

2. பிற மனிதரால் கொலை செய்யப்பட்டு மரணிக்க மாட்டான்.

3. கழிவறையில் மரணிக்க மாட்டான்.

4. கொடூரமான நோயால் ஹார்ட் அட்டாக், எய்ட்ஸ்,புற்றுநோய் இவற்றால் இறந்திருக்க மாட்டான்.

5. தற்கொலையால் மரணிக்க மாட்டான்.

6. எதிரிகளால் விஷம் வைத்து மரணிக்கப்பட மாட்டான்.

7. சுனாமி, நிலநடுக்கம்,இடி மின்னல் தாக்குதல் போன்றவற்றால் மரணிக்க மாட்டான்.

இதையும் இப்படியே இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
சரி பிறப்பிலும் இல்லை இறப்பிலும் இல்லைஇந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்நாளிலாவது உரிமை இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

1.கட்டிடத் தொழிலாளி நாம் டாக்டராக ஆகி இருக்க வேண்டாமா என்று நினைக்கிறார்.

2. குடிசையில் வாழ்பவன் மாளிகையில் வாழ நினைக்கிறான்.

3. பிளாட்பாரத்தில் வாழ்பவர் ஒரு குடிசை கிடைக்காதா என்று நினைக்கிறான்.

4.திருமணம் நடந்தால் அவரவர் நினைத்தபடி நிறைவாக நடப்பதாக தெரிய வில்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி.

5.பெண்கள் தன் ஆசைக்கிணங்க நகைகளைப் போட்டு தைரியமாக போக முடியவில்லை.

6. வங்கிகளில் நிறைய பணங்களை எடுத்து வருபவர் பயந்து பயந்துதான் வர வேண்டியுள்ளது.

7.யாரும் விரும்பியும் விரும்பாமலும் ஏதாவது நோய் தொற்றிவிடுகிறது.நிம்மதி இல்லை.

8.வீடுகளைப் பூட்டிவிட்டு தைரியமாக சொந்தங்கள் வீட்டுக்கோ அல்லது உல்லாச பயணமோ போக முடியவில்லை திருட்டு போய்விடுகிறது.

9.பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்றால் பணம் தேவை. அது இல்லை என்றால் படிக்க முடியாது.

10.வேலை வாய்ப்பு நாம் நினைப்பது போல் அமைவதில்லை.

இப்படியாக இதையும் நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்,

இப்படி பிறப்பிலும் இறப்பிலும் வாழ்நாளிலும் உரிமையே இல்லாத மனிதனின் வகைகள் எத்தனை என்பதை பார்ப்போம்.

ஒரு சிலர் சொல்வார்கள்: ஆண் பெண் என்று சுருக்கமாக முடித்து விடுவார்கள்.
இன்னும் சிலர் ஆண்,பெண்,அரவாணிகள் என்று முடித்துக் கொள்வார்கள்.

இனி ஒரு சாரார் கருப்பு வெள்ளை மாநிறம் என்று சொல்வார். மற்றொரு சாரார் படித்தவன்,படிக்காதவன்,ஏழை,பணக்காரன்உயரமானவன்,குட்டையானவன்,
வலிமை வாய்ந்தவன்,பலஹீனமானவர்,ஒல்லியானவர்,குண்டானவர்
இப்படி அடுக்குவார்கள்.

இன்னொரு சாரார். இந்தியன்,அமெரிக்கர்,அராபியர்,ஜெர்மானியர்,ஜப்பானியர்,சீனர் ,கொரியர்,
ஆப்பிரிக்கர் என்று சொல்வர்.இவை எல்லாம் போக இன்னொரு வகை இருக்கிறது.

        A                               B
நல்லவன்-------------------------------கெட்டவன்

உதவி செய்பவர்----------------------கஞ்சன்

பொறுமையாளன்--------------------அவசரக்காரன்

நம்பிக்கையாளன்---------------------நயவஞ்சகன்-

கொடைவள்ளல்-----------------------கருமி

இரக்கமுடையவன்--------------------கொடூரமானவன்

நல்லதையே பேசுபவர்----------------தீயதையே பேசுபவர்

அமைதியானவர்-------------------------கோபமுடையவர்

உண்மையாளர்----------------------------பொய்யர்

பொதுநலவாதி-----------------------------சுயநலவாதி

பண்புடையவர்------------------------------பாவி

நீதியாளர்--------------------------------------அக்கிரமக்காரன்

சமாதான விரும்பி--------------------------குழப்பவாதி

தாராள குணவாளர்------------------------ -கடுகடுப்பாளார்

மனசாட்சிக்குப் பயப்படுபவர்-------------முரட்டுத்தனமானவர்

ஏற்றுக் கொள்பவர்----------------------------மறுப்பவர்

குற்றம் மறைப்பவர்-------------------------கோள் மூட்டுபவர்

அமானிதர்------------------------------------- -போட்டுக் கொடுப்பவர்

அறம் செய்பவர்------------------------------- புறம்பேசுபவர்

தட்டிக் கேட்பவர்------------------------------பொல்லாதவர்

கொடுத்து உதவுபவர்------------------------ போக்கிரி ரவுடி

பிறர்நலம் நாடுபவர்-------------------------- நன்றி கெட்டவர்.

இதில் எந்தவகையை சார்ந்தவராக இருக்க விரும்புகிறீர்கள்? ஆசைப்படுகிறீர்கள்..?
எந்த வகை பிரிவாக இருந்தாலு சரி வாழ்க்கையில்
ஏமாறலாமா..? அல்லது ஏமாற்றலாமா?
என்பதை அடுத்து வரும் 01-07-2011-ல் அறிந்து கொள்ளப் போகிறோம்

மேலும் 'அமைதிப்பூங்கா' பிளாக்ஸ்பாட்டை தொடர்ந்து ஆவலுடன் பார்த்தும் இனி பார்க்கவும் இருக்கும் சகோதர சகோதரிகள் அனைவரும் மறக்கவே கூடாத ஒரு அறிவுப்பும் வேண்டுகோளும் கூட..

எல்லோரும் நலம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நோக்கத்தில் அமைதிப்பூங்கா என்ற தலையங்கத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் பிரசுரம் செய்து வருகிறோம் இப்பிரசுரம், செய்தி, தகவல் வன்முறையை தூண்டக்கூடியதாக உள்ளது என்று ஒருசிலர் புகார் செய்திருப்பதாகவும் அதனால் தற்காலிகமாக தமிழ்மணத்தில் தடை செய்திருக்கிறார்கள்.

எனவே புகார் செய்த சகோதர சகோதரிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மட்டும்
"சந்தேக கோடு அது சந்தோஷ கேடு.. "
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானுங்களே..

ஆகவே உங்களுக்கான பதிலும் தெளிவும் பெறுவதற்கு

1.  தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று ஒருபிரபல நபர் சொல்லியுள்ளார்.இதை நீங்கள் வன்முறையாகத்தான் எடுத்துக் கொள்வீர்களா?

2.உங்களுக்குத் தெரிந்த எதாவது ஒரு தமிழ் பண்டிதரிடம் படித்துப் பார்க்கச்சொல்லி அவருடைய வாக்கு மூலம் கேட்டு தெளிவு பெறுங்கள்.

3.ஒரு வார்த்தை கூட வன்முறையைத் தூண்டக்கூடியதாக காண்பிக்க முடியாது.

4.ஒவ்வொரு வார்த்தையும் நன்முறையையும் நன்மையையும் சிந்தனையையும் சீர்திருத்தத்தையும் தூண்டும் சிறந்த சொற்களைத் தவிர வேறெதுவையும் காண முடியாது.

5. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?

நேரடியாக எங்களிடம் கருத்து பெட்டகத்தின் மூலமாக விளக்கி நீங்கள் நன்முறையை நாடுபவராக இருந்தால் எங்களை அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதன் பொருளுக்கு இணங்க திருத்தலாமே ஏன் இந்த தலைமறைவு?

6.எங்களுடைய பிரசுரம் புகார் செய்தவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பொறாமையை ஏற்படுத்தி உள்ளது என நினைக்கிறேன்

7.பொதுவாக எல்லோரும் பார்க்கும் தமிழ்மணத்தில் ஒருவருக்கு எப்படி விமர்சனம் செய்வது என்பது கூட தெரியவில்லை.தமிழ்பண்பு தெரியாதவர் போல் தோன்றுகிறது.

எங்களைப் போன்ற மூதேவிகளின் முயற்சியால்தான் நீங்கள் எல்லாம் சீதேவிகளாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பதற்கான பல வரலாறுகளைப் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

யார் தடை செய்ய முயற்சித்தாலும் உங்களுடைய ஒவ்வொரு தடையும் உங்கள் உடன்பிறவா சகோதரனுக்கு ஆயிரம் படிக்கற்களாய் அமையும் என்பதை அன்புடன் சகோதர உணர்வுடன் தொடர்ந்து அமைதிப் பூங்காவை தவறாதுப் பார்த்து தங்கள் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதுடன் தமிழகத்துக்கு ஒரு நல்ல சரியான நலத்திட்டம் உருவாக உதவியாகவும் இருங்கள் என்று நன்முறையாகக் கேட்டுக் கொள்கிறோம்.

5.03.2011

வாழ்க்கை வாழவா வழக்காடவா?

வாழ்க்கை வாழவா வழக்காடவா?
என் கின்ற தலைப்பின் வாயிலாக
" அமைதி பூங்கா" அறக்கட்டளை எதற்கு?
என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆவலுடன்
01.05.2011 வரை வாடாமல் காத்திருக்கும்
வண்ணமலர்களே! வாருங்கள், பாருங்கள்.
பார்வையில் பலச்செய்திகளை இடம்பெறச்
செய்திருப்பது, நாம், சிந்தித்து, உணர்ந்து, படிப்பினை
பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை, எண்ணத்தை
நினைவில் நிறுத்தி தொடரவும்:
1. குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து.
சம்பவ இடத்திலேயே 63 பயணிகள் பரிதாபமாக
உயிரிழந்தார்கள்.
2. வறுமைக் காரணம் குடும்பமே தற்கொலை
உணவில் விஷம் கலந்து
3. மாடியிலிருந்து குதித்து மாணவி மரணம் "ஈவ் டீஸிங்க்"
4. தாயைக் கொன்ற மகன் சொத்தை பிரித்து தராததால்
5. விவாகரத்து கோரியவர் மரணம் மர்மமாகவுள்ளது
6. "கொடூரம்" பாகப்பிரிவினையின் போது அண்ணன் , தம்பி
ஒருவருக்கொருவர் வெட்டிக் கொன்றனர் (கொலை)
7. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நூதனமுறையில்ச்சாவு
முன்விரோதம் எனக் கருதப்படுகிறது
8. கன்னிப்பெண் கற்பழித்துக்கொலை அடையாளம் தெரியவில்லை
9. தொழில் அதிபர் தங்கும் விடுதியில் தூக்கில் தொங்கினார்
10. திடீரென வீட்டில் புகுந்து கொலை செய்துவிட்டு ஓட்டம்
11. "திடீர்" குண்டுவெடிப்பு 40 சடலங்கள் கண்டுபிடிப்பு 130 பேர்
கவலைக்கிடம்
12. பட்டப்பகலில் துனிகரம் வங்கியில் புகுந்து கொள்ளை
13. சுங்க அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை
சிக்கியது ரொக்கமாக 10 கோடி ரூபாய்
14. பரபரப்பு சென்னையில் போலி டாக்டர்கள் கைதால்
15. அரசு மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது; மருத்துவர் வர தாமதம், மக்கள் ஆவேஷம்
16. வ்யிற்றுபசி தீர்க்க உடல்பசி தீர்த்த உத்தமி கைது
17. "தலையில் இடி" படித்தவர் முதல் பாமரர் வரைக்கும் ஏமார்றினர்
தவணைமுறை விற்பனையாளரின் தந்திரச்செயல்
18. மருத்துவரை விரட்டி, விரட்டி அடித்துக் கொன்றனர் கிராமமே
ஒன்று சேர்ந்து சிறு நீரகம் (கிட்னி) மோசடி
19. கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போனது இரண்டு சக்கர
மோட்டார் வாகனம்
20. கத்திமுனையில் வழிப்பறி; தாலியும் போனது, பட்டதாரி கைது
21. சாலை மறியல் குடி நீர் கேட்டு பெண்கள்
22. குப்பைத் தொட்டியில் கொழு, கொழு ஆண் குழந்தை
23. லஞ்சம் வாங்க மறுத்த உயர் போலீஸ்
அதிகாரியை சுட்டுத் தள்ளினர்.
24. போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தவர் கைது
25. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக பல இலட்சம் பணமோசடி
இன்னொரு பக்கம் விலைவாசி உயர்வு,
வேலை இல்லா திண்டாட்டம், லஞ்சம், ஊழல், பிச்சைக்காரர்கள்,
மதுக்கடைகள், விபச்சார விடுதி, போதை பொருட்கள், கடத்தல்
போன்றவைகள் வளர்ந்து கொண்டே வருதல்,
இப்படியாக, இன்னும் அடிக்கிக்கொண்டே போகலாம்
இச்சூழலில் தமிழகத்தை அமைதி பூங்கா என்றழைப்பதா? அமளிபூங்கா
என்றழைப்பதா?
மக்கள் மன நிலை மாறவேண்டும்; அல்லது
மாற்ற வேண்டும், அதற்குத்தான் "அமைதி பூங்கா" அறக்கட்டளை.
முடியுமா? கேள்விகள் எழலாம்? முடியும்
மாணவ, மாணவியர் ஒன்றிணைந்தால் நிச்சயம்
எப்படி என்பதை அறிய ஆவலாக இருக்கிறதா?
இருந்தால், இந்த தமிழகத்தில் சுமார் 10 கோடி
மக்கள் வாழ்கிறோம்; குடும்பத்திற்கு 5 பேர் என்று
வைத்துக்கொண்டாலும் 2 கோடி குடும்பங்கள்; குடும்பத்திற்கு
1 வர் வீதம் பார்த்தாலும் 2 கோடி மாணவ, மாணவியர் மா நில
அளவில் படித்து வருகிறோம்;
இதில் நாலில் ஒரு பங்காக கணக்கிட்டாலும் 50 இலட்சம்
மாணவ, மாணவியரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தெரியப்படுத்தப்படும்
(அறிவித்துத் தரப்படும்)
அது நாள் வரை பல தலைப்புகளில் தெளிவு
பெற்று மன மாற்றத்தை மலரச்செய்வோம்.
அடுத்து, மேற்க்கண்ட சம்பவங்கள் அனைத்தும்
நடைபெறக் காரணமாவது:
1. பகுத்தறிவை பயன்படுத்தாதது
2. மனசாட்சி இல்லாதது
3. சுய நலம், தனக்குத்தானே தீங்கிழைத்தல்
4. ஏமாறுவது, ஏமாற்றுவது
5. சொல் ஒன்று, செயல் ஒன்றாயிருப்பது
6. உழைக்காமல் உண்ணுதல்
7. பொறாமை, கஞ்சத்தனம்,பேராசை
8. சிந்திக்காமல் செயல்படுதல்
9. சமூகச்சீரழிவு, சமூக ஊனம், சமூக மூட நம்பிக்கைகள்
10.தான் ஒரு மனிதன், ஒரு நாள் மரணிப்பவன் என்பதை மறந்து வாழ்தல்
இவைகளுக்கான விளக்கம் காண்பதற்கு முற்படும்
முன்பாக வேறு சில விஷயங்களை அறிவது அவசியமாகும்
அந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபெறத்தான்
நீதி மன்றங்களை அனுகி வழக்குகள் தொடர்கிறோம்; ஏன்?
தானாக தெரியவருகிறது வாழ்க்கை வாழத்தான் என்று,
அவ்வாழ்வு நிம்மதியாக அமைய வேண்டுமென்றால்
நிம்மதியில் முதல் இரண்டு எழுத்துக்களை நீக்கினால் "மதி" (அறிவு,புத்தி)
நடுவிலுள்ள இரண்டு எழுத்துக்களை அகற்றினால் 'நிதி' (பணம்)
இந்த இரண்டையும் (மதி+நிதி) பயன்படுத்தும் விதமாக பயன்
படுத்தினால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்
இல்லையென்றால் "அதோகதி" தான் எதிர்காலம்
வாழ்வின் அடிப்படை தேவை என்ன? பணம், இல்லையா!
இதை பெறும் வழிகள் 1. உடல் உழைப்பு 2. அறிவுத்திறன் 3. முதலீடு செய்தல்.
இப்படி தேடும்போது நம் தேவையை பூர்த்தி செய்யுமளவு பெற்றால் வாழ்க்கை சரியாக ஓடும், இல்லையென்றால் சரிந்துதான்
ஓடும்.
சரி செய்யும் அளவு பெற நம்மிடம் தரமான கல்வி
வேண்டும் எதிர்கால நோக்குடன்; இக்கல்வி பெற கட்டு, கட்டா
பணம் கொடுக்கும் இழி நிலைதான் உள்ளது; இதற்கிடையில்
லஞ்சம் ஊழல் தலையீடு பெரும் பிரச்சினை இல்லீங்களா
இத்தடைகளை தாண்ட சொத்துக்களை விற்று, அடமானம்
வைத்து, கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி, வங்கியில் உதவிப்பெற்று
படித்து முடித்தாலும், படித்து முடித்தவுடன் வேலை
வாய்ப்பில்லை அதுவும்; அனைவர்க்குமில்லை, கிடைத்தாலும்
எதிர்பார்த்த ஊதியம் இல்லை; எதிர்பார்த்த சம்பளம் கிடைத்தால்
உற்றார் உறவினரை உதறி தள்ளிவிட்டு ஊர்விட்டு ஊர்,
அல்லது நாடுவிட்டு நாடு செல்லும் பரிதாப நிலைதான்
இப்போது இந் நிலைமை என்றால் மாணவ மாணவியராக
இருப்போர் எதிர்காலத்தில் பெற்றோராகும் போது நமது
நிலை என்ன நிலையோ அச்சமாக இருக்கிறது, அல்லவா?
எதிர்காலம் எழுச்சியும், வளர்சியும், எதிர்பார்க்கும்
விதமாகவும் அமைய எண்ணினால் "அமைதி பூங்கா" அறக்கட்டளை
மாணவ, மாணவியர் அமைத்திட, ஏற்படுத்திட, உருவாக்கிட வேண்டியது
கட்டாயமாக இருக்கிறது.
இக்கட்டாயத்தில் நாம் ஒன்றை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்
1947 ஆகஸ்ட்டு 15ம் நாள்வரை அரபியரும் ஆங்கிலேயரும்,
அயல் நாட்டு அனைவரும் இந்தியாவிற்கு விஜயம் செய்து வியாபாரம் செய்து
பிழைத்தார்கள் என்பது வரலாறு
அதே நாள் சுதந்திரம் வாங்கியது முதல் இன்றுவரை
இந்தியர் பிழைப்புத்தேடி அயல் நாடு செல்ல வைத்தது நம் தகராறு; ஏன்?
என்னவளம் இல்லை இந்த திரு நாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்
உழைப்போம் உண்மையாய் உள் நாட்டில்
ஒரு நாள் உலகம் உற்று நோக்கும் தமிழ் நாட்டில்

எவர்களை வெளியேற்றி சுதந்திரம் அடைந்தோமோ
அவர்களிடமே கடன் வாங்கிய நாடாக இருக்கும் அவல நிலை
வெளி நாடு வந்தாலும் அவர்க்ளின் கீழ் பணிபுரியும்
"சணி" நிலை
வரும் 15-08-2011 அன்று சுதந்திரம்க் பெற்று 64 வருடம் நிறைவு
பெற்று 65-வது வருடம் ஆரம்பம்? ஏன் இந்த சுதந்திரம்
என்றாவது சிந்தித்ததுண்டா? இன்று முதல் சிந்தியுங்கள், சிந்தித்துக்கொண்டேயிருங்கள்
01-06-2011 வரை
அன்று எதிலும் "மனிதன் உரிமை" இல்லாதவன்
என்பதை படிப்போம்; பயணத்தை தொடர்வோம்
"அமைதி பூங்கா" அறக்கட்டளையை நோக்கி
புறப்படுங்கள் உடனே, மாணவ மாணவியரே!
நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்.

, , , 

3.31.2011

ஆக்கமும் தாக்கமும்

அமைதி பூங்காவில்
பூத்துக்குலுங்கும் தமிழகத்து மலர்களாகிய நாம் மீண்டும் மலர்ந்த முகத்துடன் 01-04-2011,இன்று எதிர்பார்த்திருக்கும் "ஆக்கமும் தாக்கமும்" என்ற தலைப்பின் ஊடாக ஏன்? என்பதை முதலில் காண்போம்.

முழு மனித சமூகத்திற்கும், மனிதர்களால் ஆக்கங்களும் அதன் வாயிலாக தாக்கங்களும், நன்மைகளும் மட்டும்தான் கிடைத்திடவேண்டும், கடுகளவும் அழிவோ, அக்கிரமங்களோ இனிமேல் என்றும் நடந்திடக்கூடாது என்பதாகும்.


ஆக்கம்: ஒன்றை உருவாக்குவது அல்லது கண்டுபிடிப்பது ஆக்கமாகும்

தாக்கம்: உருவாக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்டவைகளால் முழு மனித சமூகமும் பெறும் பலன் களும் நன்மைகளும் தாக்கமாகும்.
மின்சாரம்: உதாரணத்திற்கு இதை எடுத்துக்கொள்வோம். இது ஒரு கண்டுபிடிப்பு.

1. கோடிக்கணக்கான மக்கள் உலகளவில் பிழைப்பை ஓட்ட பொருளாதாரம் தேடும் வகையில் தொழிற் கல்வியாக அமைந்து எலக்டிரிக்கல் இன்ஜீனியர், எலக்டிரீஷியன் போன்ற சான்றிதழ் பெறுவதுடன் அரசாங்கத்தால் மின்சார வாரியம் என்று வரவும் ஏற்படுத்துகிறது.

2. சூரியன் மறைந்தவுடன் இருளில் மூழ்கிடும் இவ்வுலகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதும் இந்த மின்சாரம்தான்

3. உலகம் மொத்தமும் தமது வீடுகளில் பயன்படுத்திவரும் குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, தேய்ப்பு பெட்டி, வாஷிங்க் மெஷின், தையல் மெஷின்,கிரைண்டர், மிக்ஸி, தண்ணீர் மோட்டார், தொலைபேசி மற்றும் கம்யூட்டர் போன்ற அணைத்தும் மின்சாரம் இல்லாமல் இயங்குமா?
4. முழுமனித சமூகமும் உபயோகம் செய்துகொண்டிருக்கும் அனைத்துப்பொருட்களையும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்குவதற்கு தேவையானதும் மின்சாரம்தான்.
5. ஆகாய விமானம், கப்பல், வாகனங்கள் போன்ற அனைத்தும் பூமியின் இந்த மூலையிலிருந்து எதிர் மூலையில் உள்ளவரையும், தொழில் ரீதியாகவும் தொடர்பை ஏற்படுத்துவதும் நடை பெறவேண்டுமானால் மின்சாரத்தால்தான் முடியும்.
6. இன்னும் மருத்துவமணைகளில் எக்ஸ்ரே மெஷின், ஸ்கேன், இரத்தபரிசோதனைகள் செய்யும் இயந்திரங்களும் மின்சாரத்தால்தான் செயல்படுகின்றன. இப்படியாக இன்னும் அடுக்கிக் கொண்டேபோகலாம். இதனைக் கண்டுபிடித்தவர் இப்போது வருவாரேயானால் அவருக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
மின்சாரம் இல்லை என்றால் மண்ணுலகம் இல்லை என்கிற அளவு தாக்கத்தையும் பலனையும், நன்மைகளையும் தந்து கொண்டிருக்கிறது.

உருவாக்குதல்: உதாரணத்திற்கு மாம்பழம், வாழை,ஆப்பில்,ஆரஞ்சு,திராட்சை, மாதுளையை எடுத்துக்கொள்வோம்.இவைகளில் ஏதாவது ஒன்றை உண்டு சுவைக்காதயாரும் உண்டா? சிந்தியுங்கள்.இந்த பழங்களைதரும் மரங்களை உருவாக்கியதில் நமக்கு ஏதாவது பங்கு இருக்கிறதா? இல்லவே இல்லை. இருந்தாலும் அனுபவித்து வருகிறோம்.
நமக்கு முன்னோர் நமக்கு இப்படிப்பட்ட நலன் பெறும் காரியங்களை செய்ததுபோல் நாம் நமக்குப்பின் வருபவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமா? வேண்டாமா? அப்படி செய்வது என்றால் அது எப்படி அமையவேண்டும் தெரியுமா? நாளை அறுவடை செய்யும் நிலையில் உள்ள ஒரு நெல்பயிரை பிடுங்கி ஆய்வு செய்து பாருங்கள். அதில் ஏழு கதிகள் இருக்கும். ஒவ்வொரு கதிரிலும் சுமார் 100 நெல் மணி வீதம் மொத்தம் சுமார் 700 நெல் மணிகளை காண்பீர்கள். ஆனால் விதைத்தது ஒறு நெல்மணிதான். இதிலிருந்து கிடைக்கும் படிப்பினைபடி தமிழகத்து மலர்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பூமாலையை உருவாக்கப்போகிறோம் அதுதான்
அமைதி பூங்கா அறக்கட்டளை (APT)
இது ஒறு ஆக்கம் இதுபோல் இன்னும் ஆறுவகை ஆக்கங்களின் வாயிலாக 700 மட்டுமல்லாமல் அதற்கும் மேற்பட்ட தாக்கங்களை, பலன் களை, நலன் களை பெற இருக்கிறொம் அப்போது இப்பூங்காவை உலகமே உற்று நோக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

அடுத்து எதற்கு? என்பதை 01-05-2011 அன்று பூத்த மலர்களாக "வாழ்க்கை வாழ்வதற்கா, வழக்காடுவதற்கா" என்ற தலைப்பின் வாயிலாக தொடர்வோம்.

இந்த அறக்கட்டளை மாநில  அளவில் ஒரு குழுவாகவும், மாவட்ட அளவில் ஒரு குழுவாகவும், கிராமங்களுக்கு ஒரு குழுவாகவும் செயல்பட இருப்பதால் இதில் ஏதாவது ஒன்றில் செயல்பட விருப்பம் உள்ளவராக இருப்பின் அதில் எந்நிலையில் செயல்பட விரும்புகிறீர்கள் எபதை தெரியப்படுத்தவும்.
தலைவராகவா, செயலாளரா, கணக்காளரா, ஆலோசகரா, செய்திகளை சேகரிப்பவரா, மக்கள் தொடர்பு இப்படி எதில் ஆர்வம் என்பதை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அறிவிப்பு மாணவ, மாணவியருக்குரியதாகும்

நல்லதை நினைப்போம்; நல்லதையே செய்வோம். அறிந்தவர் அனைவர்க்கும் தவறாது அறிவிக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய